உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டையில் காசநோய் பரிசோதனை முகாம்
- இந்திய காசநோய் தடுப்பு கழகம் சார்பில் இலவச காச நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- தொடர் சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லங்களிலேயே மருந்து மாத்திரைகள் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் விராலிப்பட்டி ஊராட்சியில் இந்திய காசநோய் தடுப்பு கழகம் சார்பில் இலவச காச நோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முகாமை விராலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா முத்துக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த பரிசோதனை முகாமில் புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் 500க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர்.
மேலும் தொடர் சிகிச்சை தேவைப்பட்டவர்களுக்கு அவர்களது இல்லங்களிலேயே மருந்து மாத்திரைகள் கிடைக்க ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.