பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு
- பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது
- மாவட்ட கல்வி அலுவலர் நேரில் ஆய்வு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கோமாபுரம், புது நகர், குளத்தூர் நாயக்கர் பட்டி, வேலாடிப்பட்டி ,அக்கச்சிப்பட்டி ஆகிய மையங்களில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் தொடர்பான பயிற்சியும், நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஸ்போக்கன் ஆங்கில பயிற்சியும் நடைபெற்றது. பயிற்சியினை மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி. முத்தழகன், ஆசிரியர்களுக்கு பயிற்சியின் அவசியம் குறித்து எடுத்துக் கூறி, ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி முறைகளை மாணவர்களுக்கு முழுமையாக கொண்டு சேர்க்க வலியுறுத்தினார். வட்டார கல்வி அலுவலர் நரசிம்மன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். பயிற்சியில் பள்ளி ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு விரிவாக பயிற்சி அளித்தனர்.