ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
- ஆலங்குடி மகளிர் காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
- இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்
ஆலங்குடி:
ஆலங்குடி கே.வி.எஸ். தெருவில் வசித்து வருபவர் ராமு மகன் வீராச்சாமி (வயது 32). இவர் படித்த பட்டதாரி ஆவார். மேலும் இவர் புதுக்கோட்டையில் ஜவுளி கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரும் புதுக்கோட்டை சந்தைப்பேட்டை தெற்கு பகுதியை சேர்ந்த கணேசன் மகள் முருகஜோதி (23) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு ஓடி ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் நாடியம்மாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி இரு குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த இரு குடும்பத்தாரும் சமரசமாக பேசிக்கொண்டனர். பின்னர் இரு குடும்பத்தார்களும் போலீசாரிடம் சமரசம் எழுதிக் கொடுத்தனர். பின்னர் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகளை இன்ஸ்பெக்டர் உஷா நந்தினி மணமக்களை மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.