உள்ளூர் செய்திகள்
கல்லூரிக்கு சென்ற மாணவிகள் மாயம்
- கந்தர்வகோட்டையில் இருந்து புறப்பட்டு திருச்சியில் உள்ள கல்லூரிக்கு சென்ற மாணவிகள் மாயமானார்கள்
- கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை சின்ன அரிசிக்காரர் தெருவை சேர்ந்தவர் ராஜா பஷீர் மகள் யாஸ்மீனா (வயது 19). அதே பகுதியை சேர்ந்த அப்துல் காதர் மகள் சபீனா (18) இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரி விடுமுறை முடிந்து கடந்த 2-ந் தேதி காலை இவர்கள் இருவரும் கந்தர்வகோட்டையில் இருந்து திருச்சி கல்லூரிக்கு சென்றனர். ஆனால் மாணவிகள் இருவரும் கல்லூரிக்கு வரவில்லை என்று பெற்றோருக்கு தகவல் வந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மாணவிகளை அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். எந்த தகவலும் கிடைக்காததால் கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.