உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி சௌந்தரநாயகி அம்பிகா - செங்கழனி திருமேனி நாதர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-07-14 14:54 IST   |   Update On 2022-07-14 14:54:00 IST
  • செங்கமேடு கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் சௌந்தரநாயகி அம்பிகா சமேத செங்கழனி திருமேனி நாதர் கோவிலில் ஆகம விதிகள்படி திருப்பணிகள் நடைபெற்று முடிந்தது
  • னித நீர் நிரம்பிய குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச்சென்று கருட பகவான் வானத்தை வட்டமிட புனித நீர் கோபுர கலசம் மற்றும் கருவறை கலசங்களில் ஊற்றப்பட்டது

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வடக்களூர் நாட்டைச் சேர்ந்த செங்கமேடு கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் சௌந்தரநாயகி அம்பிகா சமேத செங்கழனி திருமேனி நாதர் கோவிலில் ஆகம விதிகள்படி திருப்பணிகள் நடைபெற்று முடிந்தது.

இதையடுத்து சுவாமி, அம்பாள் மற்றும் செல்வ விநாயகர், செல்வ முருகன், முனீஸ்வரர், அய்யனார், பெரிய கருப்பு, சின்ன கருப்பு, தூண்டி கருப்பு, அக்னி காளி, முன்னாடியான், சப்த கன்னிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் சிவராஜ மகேந் திரா சுவாமி கள் தலைமையில் நடைபெற்றது.

விழாவில் யானை, குதிரை கோவிலை சுற்றி வலம் வந்து காண்போரை பிரமிக்க வைத்தது. சிவாச்சாரியார்கள் யாக சாலைகள் அமைத்து தொடர்ந்து மந்திரம் முழங்க புனித நீர் நிரம்பிய குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்துச்சென்று கருட பகவான் வானத்தை வட்டமிட புனித நீர் கோபுர கலசம் மற்றும் கருவறை கலசங்களில் ஊற்றப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஆயிரத்திற்கு ம் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு கோவில் கலசத்தில் கங்கை புனித நீர் ஊற்றப்பட்டு பொதுமக்கள் மக்கள் மேல் தெளிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News