உள்ளூர் செய்திகள்

சுயஉதவிக்குழுவினர் தயாரித்த பொருட்களை பொதுமக்கள் வாங்கி ஊக்குவிக்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்

Published On 2022-06-26 07:18 GMT   |   Update On 2022-06-26 07:18 GMT
  • சுயஉதவிக்குழுவினர் தயாரித்த பொருட்களை பொதுமக்கள் வாங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
  • துவக்கி வைத்து பார்வையிட்டார்


புதுக்கோட்டை :

புதுக்கோட்டை நகராட்சி காந்தி பூங்காவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், வரும் 30-ந் தேதி வரை நடைபெறும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் கூறுகையில்,

இந்த கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயார் செய்யப்பட்ட குந்தன்ஜுவல்லரி, டெரகோட்டா பொம்மைகள், வத்தல் வடகம், செட்டிநாடு ஊறுகாய் ரெடிமேட் ரகங்கள், மண்புழு உரம், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்களினாலான மதிப்புக் கூட்டப்பட்ட உணவு பண்டங்கள், நர்சரி செடிகள் பழ மரக்கன்றுகள், அழகிய

ரோஜாப்பூ செடிகள், ஆரி ஒர்க், இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட மரச்செக்கு எண்ணெய் வகைகள், செட்டிநாட்டு தின்பண்டங்கள், தஞ்சாவூர் பிக்சர் பெயிண்டிங், ஆசோலா போன்ற பல்வேறுபட்ட விதவிதமான சுய உதவிக்குழு பொருட்களின் விற்பனை அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

எனவே பொதுமக்கள் அனைவரும் மகளிர்சுய உதவிக்குழுவினரால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டு, பொருட்களை வாங்கி அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா , புதுக்கோட்டை நகரமன்றத் தலைவர் திலகவதி செந்தில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, நகராட்சி ஆணையர் நாகராஜன், உதவி திட்ட அலுவலர் ராஜாமுகமது மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News