- அமைச்சர் மெய்யநாதன் பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடைபெற்றது
- திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் ஆலங்குடி பேரூர் தி.மு.க. சார்பாக மேலகரும்புரான் கோட்டை வெற்றி விநாயகர் கோவில் திடலில் நடைபெற்றது
ஆலங்குடி,
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொள்ளும், விழாக்களில் மரக்கன்றுகள் நட்டு வைப்பது வழக்கம். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அதிக அளவில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் குறுங்காடுகள் அமைத்து மா, பலா, உட்பட பல்வேறு மரக்கன்றுகளை நடவு செய்து அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டு உள்ளார். இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவர், பிறந்தநாளையொட்டி வாழ்த்துக்கள் கூறி யாரும் டிஜிட்டல் பேனர் வைக்க வேண்டாம். என் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் தங்களால் முடிந்தவரை மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்துங்கள் என்று கேட்டுக்கொண்டார்.இதனை தொடர்ந்து திருவரங்குளம் மேற்கு ஒன்றியம் ஆலங்குடி பேரூர் தி.மு.க. சார்பாக மேலகரும்புரான் கோட்டை வெற்றி விநாயகர் கோவில் திடலில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றி,ய நகர பொறுப்பாளர்கள், உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.