கால்நடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை
- கால்நடைகளை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா மற்றும் சட்டமன்ற தொகுதியின் தலைமை இடமாக உள்ளது. மேலும், தஞ்சாவூர் மதுரைக்காண சாலை போக்குவரத்து கந்தர்வகோட்டை வழியாக உள்ளதால். கந்தர்வகோட்டைக்கு தினசரி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், அலுவலர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும் வாகனத்தில் செய்வார்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது . இந்த நிலையில் கந்தர்வ கோட்டையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் அச்சுறுத்தும் வகையில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன. எனவே சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தவும், கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.