உள்ளூர் செய்திகள்

குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2022-07-06 13:43 IST   |   Update On 2022-07-06 13:43:00 IST
  • குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
  • 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

புதுக்கோட்டை:

ஆலங்குடி அருகேயுள்ள நகரம் கிராமத்தில் பொதுமக்களுக்கு சரிவர குடிநீர் வழங்கப்படுவதில்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை ஏதும் இல்லையாம். இந்நிலையில், உடனே குடிநீர் வழங்கக்கோரி அப்பகுதி மக்கள் காலிக்குடங்களுடன் நகரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற கீரமங்கலம் போலீசார், பேச்சுவார்த்தை நடத்திய பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News