- கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது
- கந்தர்வகோட்டை தலைமை மருத்துவமனையை விரிவு படுத்த வேண்டும்உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற வலியுறுத்தல்
கந்தர்வகோட்டை,
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் தலைமையில் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
ஆணையர்கள் திலகவதி, பால் பிரான்சிஸ், துணைத் தலைவர் செந்தாமரை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கந்தர்வகோட்டை காந்தி சிலை அருகே உயர் கோபுர விளக்கு அமைக்க வேண்டும், கந்தர்வகோட்டை தலைமை மருத்துவமனையை விரிவு படுத்த வேண்டும்உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர் உறுப்பினர்களின் கோரிக்கை நிதி நிலைமைக்கு ஏற்ப நிறைவேற்றித் தரப்படும் என்று கூறினார். கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாண்டியன், பாரதி பிரியா, கலியபெருமாள், கோவிந்தராஜ், மலர், முருகேசன், திருப்பதி, நதியா, சுதா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அலுவலக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.