உள்ளூர் செய்திகள்

வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2023-09-18 12:46 IST   |   Update On 2023-09-18 12:46:00 IST
  • விராலிமலை வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
  • கைரேகைகளை பதிந்து போலீசார் தீவிர விசாரணை

விராலிமலை,  

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் ஜோஸ் விக்டர். இவர் வெல்டிங் பட்டறை தொழில் செய்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வேளா ங்கண்ணி கோவிலுக்கு சென்றார்.

பின்னர் இன்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிட ந்ததை கண்டு அதிர்ச்சியானர்.

அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீடு முழுவதும் பொருட்கள் நாலாபுறமும் சிதறிகிடந்தது. வீட்டின் அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவ ந்தது.

இதனை தொடர்ந்து ஜோஸ் விக்டர் விராலிமலை போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு விரைந்து சென்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து மர்ம நபர்கள் விட்டுச் சென்ற தடயங்களை சேகரித்தனர்.

பின்னர் அக்கம் பக்க த்தில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் உள்ள பதிவுகளையும் ஆராய்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News