உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம்

Published On 2023-08-28 12:16 IST   |   Update On 2023-08-28 12:16:00 IST
  • கந்தர்வகோட்டையில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது
  • மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அதிகரித்துள்ளது தெரிவிக்கப்பட்டது

கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வட்டார வளமையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வட்டார கல்வி அலுவலர் நரசிம்மன் தலைமையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிரகாஷ் வரவேற்றார்.இக்கூட்டத்தில் 2023-24 கல்வியாண்டில் நடைபெற உள்ள மருத்துவ முகாமில் கலந்து கொள்ள உள்ள மாணவர்களின் விவரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் ,வங்கி கணக்கு இல்லாத மாணவர்களுக்கு வங்கி கணக்கு பெற்று கல்வி மேலாண்மை இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். பள்ளி செல்லா குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த அடையாள அட்டையை பெற்று பதிவு செய்ய வேண்டும். சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் வீட்டிலே தங்கிப் பயிலும் மாற்று திறன் மாணவர்களின் பார்வையை அதிகப்படுத்த வேண்டும். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அதிகரித்துள்ளதை பெற்றோர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கலந்தலோசனை செய்யப்பட்டது . இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுனர் பாரதிதாசன், ராஜேஸ்வரி இயன்முறை மருத்துவர் சரண்யா,சிறப்பு பயிற்றுநர்கள் ரம்யா, ராணி, பிரியா, ராதா லீலா, இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக சிறப்பாசிரியர் அறிவழகன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News