உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடி அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

Published On 2022-10-02 14:13 IST   |   Update On 2022-10-02 14:13:00 IST
  • கறம்பக்குடி அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்றது.
  • கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி பள்ளி உள்கட்டமைப்பு மாணவர்கள் நலன் பள்ளி செல்லா குழந்தைகள் ஆகிய தலைப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

புதுக்கோட்டை :

கறம்பக்குடி அனுமார் கோவில் அரசு தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ராஜா தலைமையில் நடைபெற்றது.

மேலாண்மை குழு தலைவர் சித்ரா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் வரவேற்று பேசினார். இதில் பார்வையாளராக ஆசிரியர் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் தனசேகர் கலந்து கொண்டார். கூட்டத்தில் பள்ளி சுற்றுப்புற சுவர் கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டனர்.

மேலும் இல்லம் தேடி கல்வி பள்ளி உள்கட்டமைப்பு மாணவர்கள் நலன் பள்ளி செல்லா குழந்தைகள் ஆகிய தலைப்புகளில் ஆலோசனை நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் இருபால் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News