உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் விநாயகர் சிலை அகற்றம்

Published On 2023-09-19 13:07 IST   |   Update On 2023-09-19 13:07:00 IST
புதுக்கோட்டை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றப்பட்டது

 புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் 704 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அதன்படி அந்தந்த இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து, அலங்காரம் செய்து நேற்று காலை முதல் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர். மேலும் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் அகற்றினர். இதில் புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே ஆஞ்சநேயர் கோவில் பக்கம் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது.

இந்த சிலை வைப்பதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் உடனடியாக வந்தனர். மேலும் அந்த சிலையை உடனடியாக அகற்றினர். சரக்கு வேனில் கொண்டு சென்று அருகில் உள்ள புதுக்குளத்தில் கரைத்தனர்.

Tags:    

Similar News