உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் கிராமசபை கூட்டம் - இலவச வீட்டு மனை கேட்டு பொது மக்கள் மனு

Published On 2022-07-14 14:39 IST   |   Update On 2022-07-14 14:39:00 IST
  • கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் சிவன் கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்றது
  • கூட்டத்தில் வறுமைக்கோடு பட்டியலில் பெயர் சேர்த்தல், இலவச மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கேட்டும் பொதுமக்கள் மனு அளித்தனர்

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் சிவன் கோவிலில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் செல்வி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு பொதுமக்கள் ஒப்புதல் பெறப்பட்டது ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் சிறப்பு பற்றாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் வறுமைக்கோடு பட்டியலில் பெயர் சேர்த்தல், இலவச மனை பட்டா மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடுகள் கேட்டும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

பழைய கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் ராணி முருகேசன் தலைமையிலும், அண்டனூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் இளங்கோவன் தலைமையிலும், பல்லவராயன் பட்டி கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா மணிகண்டன் தலைமையிலும், நடைபெற்றது.

Tags:    

Similar News