கதவை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளை
- அறந்தாங்கி அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 10 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
- நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏகணிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுமத் நிஷா (40). இவர் மகளுடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.
கணவர் முகம்மதுமீராஷா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் ரகுமத் நிஷா மைவயல் கிராமத்தில் உள்ள உறவினர் குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது பின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ளே அறைகள் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 1கவர்னர் செயின் 9 பவுன், மோதிரம் 1 பவுன்
சுமார் 10 பவுன் நகைகள் மற்றும் லேப்டாப், செலவுக்கு வைத்திருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு சம்பவத்தை குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .