உள்ளூர் செய்திகள்

6-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Published On 2023-09-17 14:52 IST   |   Update On 2023-09-17 14:52:00 IST
  • அறந்தாங்கி அருகே 6-ம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்
  • விநாயகர் சிலைக்கு சீரியல் பல்பு மாட்டியபோது பரிதாபம்

  அறந்தாங்கி,

புதுக்கோட்டை மா வட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் மேல்பாதி பகு தியை சேர்ந்தவர் சக்திவேல்.இ வரது மகன் சின்னக்கருப்பன் (11), இவர் அதே பகுதியில் உள்ள அரசுமேல்நி லைப்பள்ளியில் 6-ம் வ குப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற விநா யகர் சதுர்த்தி விழா வை முன்னிட்டு, 2 1|2 அடி உயர விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபாடு செய்துள்ளார். மேலும் விநாயகர் சிலையை அலங்காரம் செய்வதற்காக அதற்கு சீரியல் பல்பு போ ட்டுள்ளார். அப்போது எதி ர்பாராத விதமாக சிறுவன் சின்னக்கருப்பன் மீது மின்சாரம் பாய்ந்து துடி த்துள்ளார். இதனை அறிந்த வீட்டிலிருந்தோர் சிறுவ னை மீட்டு அறந்தாங்கி அ ரசு மருத்துமனைக்கு கொ ண்டு சென்றுள்ளனர். அ ங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறு வன் பரிதாபமாக உயிரி ழந்துள்ளார். அதனை தொ டர்ந்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.சம்ப வம் குறித்து நாகுடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநா யகர் சிலைக்கு சீரியல் லைட் மாட்டிய பள்ளிச் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News