உள்ளூர் செய்திகள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா

Published On 2022-11-15 14:55 IST   |   Update On 2022-11-15 14:55:00 IST
  • ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது
  • மாணவர்களை ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றனர்

புதுக்கோட்டை:

குழந்தைகள் தின விழாவில் குதூகலம் ஐந்தே நிமிடத்தில் கவிதை எழுதி அசத்திய மாணவர்கள் புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மிகவும் வித்தியாசமான முறையில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு 'புத்தகம் இல்லா நாள்' என அறிவித்தார் பள்ளி முதல்வர் தங்கம் மூர்த்தி. புத்தகப் பை இல்லாமல் மாணவர்கள் மழையையும் பொருட்படுத்தாது மிக உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி, ரோஜாப்பூ கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு படத்துக்கு மாணவர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

ரோட்டு மேல காரு, காருக்குள்ள யாரு, எங்க மாமா நேரு என்ற பிரபலமான பாடலை முதல்வர் தங்கம் மூர்த்தி பாட மாணவர்கள் தொடர்ந்து பாடி உற்சாகத்தில் மகிழ்ந்தனர்.

ஒன்பதாம் வகுப்புக்கு சென்ற பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி மாணவர்களை சந்தித்து இன்று மழை பெய்கிறது. ஜன்னல் வழியே அதனை ரசிக்கிறீர்கள். அதனை வைத்து கவிதை எழுதுங்களேன் என்று கூற உடனே பேனா எடுத்த மாணவர்கள் ஐந்தே நிமிடங்களில் மழை பற்றிய மழலைச் சிந்தனைச் சிதறல்களை கவிதைகளாக எழுதிக் காட்டியது பெரும் வியப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு கோணத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி தாங்களும் கவிஞர்கள் தான் என்பதை நிரூபித்தார்கள். வகுப்புகளை அலங்கரித்து மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்றுக் கொண்டாடிய காட்சி கண்ணைக் கவர்ந்தது.

Tags:    

Similar News