உள்ளூர் செய்திகள்

சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றுகள்

Published On 2022-07-02 07:06 GMT   |   Update On 2022-07-02 07:08 GMT
  • சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றுகளை கலெக்டர் வழங்கினார்
  • தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு காணொளி நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகத்துறை சிறப்பு மருத்துவர்சரவணக்குமார் மற்றும் தனியார் மருத்துவமனையின்இருதய நோய் துறை சிறப்பு மருத்துவர் மனோஜ் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். 

Tags:    

Similar News