உள்ளூர் செய்திகள்

பேருந்துகள் வந்து செல்லாததைகண்டித்து கடையடைப்பு நடத்துவதாக அறிவிப்பு

Published On 2023-02-20 09:15 GMT   |   Update On 2023-02-20 09:15 GMT
பொதுமக்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு

புதுக்கோட்டை, 

திருமயம் நகருக்கு தேவையான அத்தியாவசிய பொது போக்குவரத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்திட திருமயம் மற்றும் சுற்றுவட்டாரம் கிராமங்களை சேர்ந்தவ ர்களது ஆலோசனை கூட்டம் திருமயம் ஊராட்சி மன்ற வளாகத்தில் உள்ள சமுதாய அரங்கில் நடைபெற்றது.கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் நகருக்குள் வர மறுக்கும் பேருந்துகளால் தங்களுக்கு ஏற்ப்பட்ட சிரமங்களை பதிவு செய்தனர்.இக்கூட்டத்தில் 20 உறுப்பினர்கள் 4 ஒருங் கிணைப்பாளர்கள் கொண்ட குழு உருவாக்க ப்பட்டது. கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம்,நகருக்குள் வர மறுக்கும் தனியார் பேருந்துகளை திருமயம் பேருந்துநிலையத்தில் மறித்து நகருக்குள் வர மறுப்பது ஏன் என விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு தகவல் தந்து புறக்கணிப்பை தடுப்பது. தீர்வு கிடைக்காத பட்சத்தில் இரு பேருந்துகளிலும் உள்ளூர் பயணிகள் யாரும் பயணிக்க வேண்டாம் என பிளக்ஸ் மற்றும் நோட்டீஸ் மூலமாக அறிவுறுத்தப்படும்நகருக்குள் வர மறுக்கும் அரசு பேருந்துகள் மற்றும் பணிமனை சம்பந்தமாக முதல்வர் தனி பிரிவு, மாவட்ட கலெக்டர், அரசு பேருந்துகளின் மேலாளர்கள் ,வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு பதிவு தபாலில் புகார் மனுக்களை அனுப்புவது.திருமயம் சட்டமன்ற உறுப்பினரிடம் மனுக்கள் அளிப்பதுதிருமயம் ரயில் நிலையத்தில் சென்னை- இராமேஸ்வரம் செல்லும் ரயில் நின்று செல்ல வேண்டும் என மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மனு அளிப்பதுமனுக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதபட்சத்தில் திருமயம் பேருந்து நிலையத்தில் உண்ணா விரதம் மேற்கொள்வது, கடையடைப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News