உள்ளூர் செய்திகள்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிலரங்கம்

Published On 2023-07-18 06:25 GMT   |   Update On 2023-07-18 06:25 GMT
  • புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிலரங்கம் தொடங்கியது
  • 5 நாட்கள் பயிலரங்கம் நடைபெறுகிறது

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மற்றும் ஐசிடிஏசிடி அகாடமி இணைந்து நடத்தும் 5 நாட்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பப் பயிலரங்கம் நடைபெற்றது.கல்லூரி இயக்குனர்ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன் வழிகாட்டுதலின் படிதுவங்கிய இப்பயிலரங்க துவக்க விழாவில், கல்லூரி முதல்வர்பாலமுருகன் தலைமையேற்று பயிலரங்கை துவக்கி வைத்தார். கணினி அறிவியல் துறை தலைவர்இளவரசி வரவேற்புரை நிகழ்த்தினார்.ஐசிடிஏசிடி அகாடமியின் முதன்மை தொழில் நுட்பபயிற்றுனர் ராகவேந்திரசாமி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி டீன் ராபின்சன் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.இப்பயிலரங்கில் மைக்ரோசாப்ட் அஸுர்-ஏஐ-ன் பயன்பாடு குறித்து முழுமையாக விளக்கப்பட உள்ளது. மேலும்ஐசிடிஏசிடி அகாடமியின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் .காளிராஜ் உதவிப் பேராசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் சசிகலா நன்றியுரை கூறினார்.

Tags:    

Similar News