உள்ளூர் செய்திகள்
கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் ஆண்டுவிழா
- கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது
- நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் வெங்கடேஸ்வரி, நரசிம்மன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் தி.மு.க. நகரச் செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்று, பள்ளியின் பெருமைகளை எடுத்துக் கூறினார். ஆண்டு விழாவை முன்னிட்டு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.