உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-09-15 13:05 IST   |   Update On 2023-09-15 13:05:00 IST
  • வாகன விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்
  • இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்

புதுக்கோட்டை

திருச்சி சின்ன சூரியூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 35). இவர் புதுக்கோட்டை வடக்கு 2-ம் வீதியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பழனியப்பா கார்னர் அருகே வந்தபோது மதுரையில் இருந்து மயிலாடுதுறைக்கு சென்ற அரசு பஸ் இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த ராமசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News