உள்ளூர் செய்திகள்

262 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2022-11-05 09:12 GMT   |   Update On 2022-11-05 09:12 GMT
  • 262 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
  • 4 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் காவல் சூப்பிரெண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். சோதனையில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி ரவுண்டானாவில் இருச்சக்கர வாகனத்தில் சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்வதற்காக ராஜகோபாலபுரம் பூங்கா நகரை ேசர்ந்த சண்முகலிங்கம் மகன் வசந்த்குமார் (வயது33) 262 கிலோ தடை செய்ய ப்பட்ட குட்கா பொருட்களை வைத்திருந்தார்.இதனை பார்த்த போலீசார் அவரை கைது செய்து, 262 கிலோ குட்கா பொருட்களையும், ரொக்கம் ரூ.1,180ம், இருசக்கர வாகனம் மற்றும் ஒரு மொபைல் போனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், இவர் பெங்களூரி லிருந்து வாங்கி வந்து புதுக்கோட்டையில் சில்லரையில் விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வசந்த்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதே போல் கீரனூரில் மளிகை கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த சையது இப்ராகிம்(42), அரிமளம் அருகே வடக்கு நல்லிப்பட்டியில் மளிகை கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த பாண்டித்துரை(60), ராயவரத்தில் வினாயகர் ஸ்டோரில் விற்பனை செய்த உலகப்பன்(40) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அரிமளம் அருகே ஆயிங்குடியில் கண்ணன் டீ கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்த கண்ணன் மனைவி காளியம்மாள் மீது போலிசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News