உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் 23 லட்சத்தில் நலத்திட்ட பணிகள்

Published On 2023-08-04 11:32 IST   |   Update On 2023-08-04 11:32:00 IST
  • அறந்தாங்கியில் 23 லட்சத்தில் நலத்திட்ட பணிகள் தொடங்கி வைப்பு
  • எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வருடங்களில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அந்தந்த பகுதிகளில் நிறைவேற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 15 லட்சம் மதிப்பிலான கலையரங்கம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ்டி ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

அதே போன்று எல்என்புரம் நடுநிலைப்பள்ளியில் 4 லட்சம் மதிப்பிலான மிதிவண்டி நிறுத்தும் கூடத்தை திறந்தும், அதே பகுதியில் 4 லட்சம் மதிப்பிலான ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர்மன்றத் தலைவர் ஆனந்த், நகரச் செயலாளர் ராஜேந்திரன், காங்கிரஸ் தெற்கு நகர தலைவர் வீராச்சாமி, கூடலூர் முத்து உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News