உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கியில் இருந்து திருச்சிக்கு உடும்புகளை கடத்த முயன்ற 2 பேர் கைது

Published On 2022-09-25 06:31 GMT   |   Update On 2022-09-25 06:31 GMT
  • அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக கையில் சாக்குப்பையுடன் 2 நபர்கள் பேருந்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட தனிப்படை போலீசார்,அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.
  • விசாரணையில் இருவரும் அழிந்துவரும் இனமான 29 உடும்புகளை பிடித்து உயிருடன் திருச்சிக்கு கடத்த முயன்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக கையில் சாக்குப்பையுடன் 2 நபர்கள் பேருந்தில் அமர்ந்திருப்பதைக் கண்ட தனிப்படை போலீசார்,அவர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.

விசாரணையில் இருவரும் கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்த ரஜினி(வயது36),மாதவன் (30) என்பதும், அவர்கள் அழிந்துவரும் இனமான 29 உடும்புகளை பிடித்து உயிருடன் திருச்சிக்கு கடத்த முயன்றிருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இருவரையும் கையும் களவுமாக பிடித்த தனிப்படையினர், அவர்களிடமிருந்த 29 உடும்புகளை பறிமுதல் செய்ததோடு இருவரையும் அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 29 உடும்புகள் மற்றும் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஒப்படைக்கப்பட்ட உடும்புகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் காடுகளில் பத்ரிரமாக விடப்படவுள்ளது.

அழிந்துவரும் இனமான உடும்புகளை பிடித்து சாக்குப்பையில் திருச்சிக்கு கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News