பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
திருவெண்ணைநல்லூர் அருகே பொது மக்கள் சாலை மறியல்
- திருவெண்ணைநல்லூர் அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
- ஊராட்சி செயலராக கணேசமூர்த்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெண்ணைவலம் ஊராட்சி செயலராக கணேசமூர்த்தி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரால் ஊர் மக்களுக்கு நல்லது நடைபெறவில்லை எனக் கூறியும் இவரை மாற்றக் கோரி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து இன்று காலை10 மணிக்கு கடலூர்- சித்தூர் சாலையில் ஊராட்சி மன்ற துைணத் தலைவர், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி திருவெண்ைண நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தகோபால கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஊராட்சி செயலாளரை உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர்.