பயனாளிக்கு மானியத்தில் 4 சக்கர குளிரூட்டப்பட்ட வாகனம் வழங்கப்பட்டது.
பயனாளிக்கு குளிரூட்டப்பட்ட 4 சக்கர வாகனம் வழங்கல்
- இளங்கோ மனைவி அருள்மதிக்கு 4 சக்கர வாகனம் வழங்கப்பட்டது.
- நிவேதா முருகன் முன்னிலையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, சுற்றுசூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன் முன்னிலையில் அனைத்து துறையை சார்ந்த அதிகபட்ச மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இதில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தில் மீனவ பயனாளிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் ரூ.8 லட்சம் மானிய தொகையில் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த இளங்கோ மனைவி அருள்மதிக்கு வழங்கப்பட்டது.
இதனை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் ராஜேஷ்குமார், ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பயனாளியின் பயன்பாட்டிற்கு வழங்கினர்.