உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

எரிவாயு சிலிண்டரை வைத்து போராட்டம் செய்த வர்கள் கைது

Published On 2022-06-26 08:43 GMT   |   Update On 2022-06-26 08:43 GMT
  • தருமபுரி அருகே போராட்டம் நடத்தியவர்கள் கைதானார்கள்.
  • அவர்களிடமிருந்து சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி மறை மாவட்டம் அரூர் தூய இருதய ஆண்டவர் ஆலய பங்கிற்குட்பட்ட 380 ஆதிதிராவிடர் குடும்பங்கள் கடந்த 1979ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டு மறைந்த மரியோ ரோடக்சன் தலைமையில் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டுவாழ்ந்து வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் உரிமைகள் மறுக்கப் படுவதாகவும், அவைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என தலித் கிருத்துவ குடும்பங்களின் 17 பங்கு பேரவையின் உறுப்பினர்கள் சூசை தலைமையில் தலித் கிறித்துவ குடும்பங்களின் நீண்டகால கோரிக்கைகளான அனைவருக்கும் வீட்டு மனை, நிலம் வீடு, நடைமுறையில் இருந்து வந்த கல்வி மற்றும் மருத்துவம் இலவசமாக மீண்டும் தொடர வேண்டும், அனைத்து வருவாய் நிதிகளையும் பங்குத்தந்தை மற்றும் பங்கு பேரவை தலைவர் செயலாளர் மூலம் வரவு செலவு காட்டிட வேண்டும், அனைத்து வேலை வாய்ப்புகளிலும் இந்த பகுதி வாழ் தலித் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தற்போது அரூர் பங்கை நிர்வாகிக்கும் லயோலா நிர்வாகத்தை கண்டித்து தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில், ஆலயத்தின் கதவுகளை உள்ளே தாளிட்டுக் கொண்டு காத்திருப்புப் போராட்டம் தர்ணா மற்றும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்தூ ய இருதய ஆண்டவர் ஆலயத்தின் அருளகம் குடியிருப்புகுள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி 9 நபர்கள் எரிவாயு சிலிண்டரை உள்ளே வைத்துக்கொண்டு கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தகவலறிந்த அரூர் உட்கோட்ட காவல்துறையினர் காலை 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மூன்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஐந்து காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் வெளியே நின்று கொண்டு ஈடுபட்டனர்.

உள்ளே இருந்த 9 நபர்கள் பேச்சுவார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் எரிவாயு சிலிண்டரை வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பூட்டு சாவி பழுது பார்க்கும் நபரை வரவழைத்து பூட்டை உடைத்து உள்ளே சென்று எரிவாயு சிலிண்டரை பறிமுதல் செய்த பிறகு 11-ஆண்கள் 8-பெண்கள் உள்ளிட்ட 19 நபர்கள் மீது வழக்குப் பதிவ செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.

எரிவாயு சிலிண்டரை அருளகம் குடியிருப்புகுள் வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வதாக போராட்டத்தில் ஈடுபட்டதால் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது. அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க சுமார் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Similar News