உள்ளூர் செய்திகள்

கோரிக்கை அட்டை அணிந்து ஊழியர்கள் பணியில் ஈடுபட்ட காட்சி.

மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப கோரி கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்

Published On 2022-12-02 15:27 IST   |   Update On 2022-12-02 15:27:00 IST
  • அரசு மருத்துவமனை களில் காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு ஆஸ்பத்திரி மருத்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர் .
  • இந்த போராட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட மருந்தாளு நர்கள் கலந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.

சேலம்:

அரசு மருத்துவமனை களில் காலியாக உள்ள 1300-க்கும் மேற்பட்ட

மருந்தாளுநர் பணியி டங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு ஆஸ்பத்திரி மருத்தகத்தில் பணியாற்றும் மருந்தாளுநர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர் .

அப்போது அவர்கள் கூறுகையில், கொரோனா ஊக்கத்தொகை, எம். எஸ். ஓ. சி. பி. மருந்தாளுனர்கள் அனைவருக்கும் உடனடி யாக வழங்கிட வேண்டும். காலியாக உள்ள எம்.எஸ்.ஓ.சி.பி பதிவு எண் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் மற்றும் மருந்தாளுனருக்கு பொது மாறுதல் கலந்தாய்வு அரசு நடத்திட வேண்டும் . இது தொடர்பாக தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோரிக்கை அட்டையை அணிந்து சேலம் அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நாங்கள் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

இந்த போராட்டத்தில் இணை செயலாளர் மணி கண்டன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட மருந்தாளு நர்கள் கலந்து கொண்டு

பணியில் ஈடுபட்டனர். சேலம் சூப்பர் ஸ்பெஷா லிட்டி மருத்துவ மனை 8 மாவட்டங்களுக்கு உள்ள டக்கியது தற்போது நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் மருந்து வழங்குவதற்கு மருந்தாளுனர்கள் இல்லாமல் சரிவர மருந்து நோயாளி களுக்கு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . எனவே தமிழக அரசு உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News