விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
- ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில், 7-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது.
- மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை போட்டிகளை தொ டங்கி வைத்தார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் சரக அள வில், விளையாட்டு போட் டிகள் தேன்கனிக்கோட்டை அருகே ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில், 7-ம் தேதி தொடங்கி 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை போட்டிகளை தொ டங்கி வைத்தார். கோட்டை உளிமங்கலம் ஊராட்சி தலைவர் நாராய ணசாமி முன்னிலை வகித்தார். போட்டிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என 22 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாண விகள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து போட்டி களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. இதில் பள்ளி தலைமை, ஆசிரியர் லூர்துசாமி தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசு வழங்கினார். ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட் டத்தை ஜான்பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தட்டிச் சென்றது. இந்த நிகழ்ச்சியில் உடற் கல்வி இயக்குநர்கள், ஆசிரி யர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண் டனர்.