உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

பழனி அருகே டைமிங் பிரச்சினையால் தனியார் பஸ் டிரைவர்கள் மோதல்

Published On 2023-11-22 10:37 IST   |   Update On 2023-11-22 10:37:00 IST
  • பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது அந்த பஸ்சை வழிமறித்து மற்றொரு தனியார் பஸ் டிரைவர் தகராறில் ஈடுபட்டார்.
  • டைமிங் பிரச்சினை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் பேசி முடிவு எடுத்து கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

பழனி:

பழனி பஸ்நிலையத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் வரை ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் தனியார் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு எடுத்துச்செல்வது தொடர்பாக டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பழனி பஸ்நிலையத்தில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு 2 தனியார் பஸ்கள் காலை 7.45 மணிக்கு இயக்கப்பட்டன. பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் சென்றபோது அந்த பஸ்சை வழிமறித்து மற்றொரு தனியார் பஸ் டிரைவர் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் திண்டுக்கல்-பழனி சாலையில் சுமார் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் ஆயக்குடி போலீசார் விரைந்து சென்று 2 பஸ்களையும் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் 2 பஸ்களின் ஆவணங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவர்களுக்கு ஒரே நேரத்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வழங்கியுள்ளது தெரியவந்தது. இதனைதொடர்ந்து இந்த பிரச்சினை குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் முன்னிலையில் பேசி முடிவு எடுத்து கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தாக்கியதில் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News