உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்

Published On 2023-03-18 15:15 IST   |   Update On 2023-03-18 15:15:00 IST
  • 3 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.
  • இன்று பரமத்தி வட்டாரத்தில் அர்த்தநாரிபாளையம் கிராமத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 3 வட்டாரங்களில் வட்டாரத்திற்கு ஒரு மருத்துவ முகாம் வீதம் 3 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. இன்று பரமத்தி வட்டாரத்தில் அர்த்தநாரிபாளையம் கிராமத்திலுள்ள பரமத்திவேலூர் தாலுகா லாரி உரிமையாளர் சங்க திருமண மண்டபத்தில், வட்டார சுகாதார திருவிழா நடைபெற்றது.

நாளை எருமப்பட்டி வட்டாரத்தில் உள்ள தூசூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், கொல்லிமலை வட்டாரத்தில் செம்மேடு வல்வில் ஓரி அரங்கிலும் சுகாதார திருவிழா நடைபெற உள்ளது.

இம்முகாமில் ஆண், பெண் தனித்தனி மருத்துவ நிபுணர்கள் மூலம் ஆலோசனை மற்றும் பரிசோதனைகள் செய்யப்பட உள்ளனர். இதில் அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

கர்ப்பிணிகளுக்கான முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு பிணி உதவி திட்டத்திற்கான ஆலோசனை வழங்கப்படும். மேலும், அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தமிழக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் இம்மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயனடையலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News