உள்ளூர் செய்திகள்

பயனாளி ஒருவருக்கு நகராட்சி தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கிய காட்சி.


கடையநல்லூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு- நகராட்சி தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் வழங்கினார்

Published On 2023-01-10 14:21 IST   |   Update On 2023-01-10 14:21:00 IST
  • குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புவழங்கப்பட வேண்டுமென முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
  • பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் வழங்கி தொடங்கி வைத்தார்.

கடையநல்லூர்:

தமிழகத்தில் வருகிற 15-ந் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அரிசி வாங்கும் குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசான கரும்பு, பச்சரிசி, சர்க்கரை மற்றும் ரொக்கப்பணம் ரூ.1,000 வழங்கப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்

அதன்படி கடையநல்லூர் நகராட்சி அட்டைக் குளம் தெரு பகுதியில் உள்ள உள்ள ரேஷன்கடையில் நடைபெற்ற பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். இதுபோன்று கடையநல்லூர் நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ், அந்தந்த பகுதி வார்டு செயலாளர் மற்றும் நகர் மன்ற வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்கள்.

Tags:    

Similar News