உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகை விடுமுறை : வாகனங்கள் படையெடுப்பால் சுங்கசாவடியில் வாகன நெரிசல்

Published On 2023-01-14 08:59 GMT   |   Update On 2023-01-14 08:59 GMT
  • நேற்று அதிகாலை 12.01 முதல்இரவு 12 மணி வரை 50 ஆயிரம் வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தது சென்றன.
  • 23 ஆயிரத்தை விட கூடுதலாக 22 ஆயிரம் வாகனங்கள் சென்றுள்ளன என்பது குறிப்பிட தக்கது.

விழுப்புரம்:

தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு இன்று முதல் தொடர்ந்து 4நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது .சென்னை தலைநகரில் வசிக்கும் அரசு,தனியார்நிறுவன அதிகாரிகள்,கூலித் தொழிலாளர்கள் ,கல்லுாரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று தைபொங்கலை தங்களுடைய உறவுகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாட முடிவு செய்தனர். அதன்படி நேற்று கார், பஸ், வேன், ஆட்டோ ,பைக் என தங்களதுவாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்ல தொடங்கினர் .விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் நேற்று மாலை பொழுதில் இருந்து வாகனங்கள் அதிக அளவில்பயணிக்க ஆரம்பித்தன.

இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து சென்றன வாகன போக்குவரத்து அதிகரித்தால் டோல் பிளாசாவில் தென் மாவட்டங்களை நோக்கி 6 வழிகள் இருந்தது வாகன நெரிசல் அதிகமானதால் கூடுதலாக நான்கு வழிகள் திறக்கப்பட்டு மொத்தம் 10 வழிகள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டடு சென்றன. தற்பொழுது 98 சதவிகித வாகனங்கள் பாஸ்டேக் வசதி பெற்றுள்ளதால் டோல் பிளாசாவை விரைவாக கடந்து சென்றன. நேற்று அதிகாலை 12.01 முதல்இரவு 12 மணி வரை 50 ஆயிரம் வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தது சென்றன. இது சராசரி போக்குவரத்தான 23 ஆயிரத்தை விட கூடுதலாக 22 ஆயிரம் வாகனங்கள் சென்றுள்ளன என்பது குறிப்பிட தக்கது.நேற்றை விட இன்று போகி பண்டிகையன்றும் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது. போக்குவரத்து தடங்கலின்றி செல்ல கண்காணித்து போக்குவரத்து சீரமைக்கும் பணியில்சுங்க சாவடி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News