உள்ளூர் செய்திகள்

குளத்தில் உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் வெளியேறிய காட்சி.

கொடைக்கானல் அருகே குளம் உடைந்து விவசாய நிலங்களில் புகுந்த நீர்

Published On 2023-01-25 05:10 GMT   |   Update On 2023-01-25 05:10 GMT
  • வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது.
  • பல ஆண்டுகளாக நீர் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில் முறையாக பராமரிக்கப்படாததால் குளம் உடைந்து விளைநிலங்களுக்குள் நீர் புகுந்தது.

கொடைக்கானல்:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மிதமான மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான கொடைக்கானல் மேல்மலை கவுஞ்சி கிராமத்தில் பெய்த தொடர்மழையால் அங்குள்ள அறம்புள்ளிப்பாறை குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்தது.

ஏற்கனவே பல ஆண்டுகளாக நீர் கசிவு ஏற்பட்டிருந்த நிலையில் முறையாக பராமரிக்கப்படாததால் குளம் உடைந்து விளைநிலங்களுக்குள் நீர் புகுந்தது.

இதனால் வளர்ந்து வரும் பயிர்களும் அறுவடைக்கு தயாராக இருந்த பணப்பயிர்களும் அழிந்து நாசமானது.மேலும் கவுஞ்சி கிராமத்தை ஒட்டிய கிராமங்களில் உள்ள குளங்களை முறையாக பராமரிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் அங்கும் இது போன்ற நிலைமை ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர். எனவே அனைத்து அணைகள் மற்றும் நீர் தேக்கங்களை சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News