உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி கும்பகோணம் சாலையில் உள்ள பட்டாசு கடையில் போலீசார் சோதனை செய்தனர்.

பண்ருட்டி பட்டாசு கடைகளில் போலீசார் அதிரடி சோதனை

Published On 2022-10-20 08:25 GMT   |   Update On 2022-10-20 08:25 GMT
  • ஏராளமான போலி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
  • போலீசார் ஒவ்வொரு கடையாகசென்று முறையான அனுமதி பெற்றுள்ளனரா என்று விசாரித்தனர்.

கடலூர்: 

 கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் 100-க்கும் மேற்பட்ட தீபாவளி பட்டாசு கடைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது சிவகாசி நேரடி விற்பனை என்ற போர்வையில் ஏராளமான போலி பட்டாசுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கடலூர் மாவட்ட தொழிலாளர் துறை அலுவலர் நேற்று அதிரடி சோதனை நடத்திவிதிமுறைகள் மீறிய கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

இதனை தொடர்ந்து இன்று காலை பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார்,பயிற்சிசப்-.இன்ஸ்பெக்டர் விஜய்,தலைமைகாவலர்சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ஒவ்வொரு கடையாகசென்று முறையான அனுமதி பெற்றுள்ளனரா?   என்றும் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள பட்டாசுகள் தரம்,தயாரிப்பு தேதி ஆகியவை ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News