துவரம்பருப்பு குடோன்களில் போலீசார் ஆய்வு செய்த காட்சி.
திண்டுக்கல்லில் துவரம்பருப்பு பதுக்கலைத் தடுக்க போலீசார் திடீர் சோதனை
- குறிப்பாக பருப்பு வகைகள் மிளகு, சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்து உள்ளது. இதில் துவரம் பருப்பு கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது.
- கடைகளில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் துவரம் பருப்பை பதுக்கி வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த 2 மாதமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக பருப்பு வகைகள் மிளகு, சீரகம் உள்ளிட்ட மளிகை பொருட்கள் கடுமையாக விலை உயர்ந்து உள்ளது. இதில் துவரம் பருப்பு கிலோ ரூ.160 வரை விற்கப்படுகிறது.
இதனால் துவரம் பருப்பு பதுக்கி வைக்கப்படுகிறதா என்பது குறித்து குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மொத்த கடைகள் மற்றும் டீலர்களிடம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், திண்டுக்கல் நகரில் 4 மொத்த விற்பனை கடைகளில் சோதனை நடத்தினர்.
கடைகளில் இருந்த ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடம் துவரம் பருப்பை பதுக்கி வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்த இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.