காணாமல் போன மாணவனை 24 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
- மேகவர்ஷனின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- சேலம் பேருந்து நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அழைத்து வந்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தாமலேரிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன் மகன் மேகவர்ஷன். இவர் தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13 -ஆம் தேதி காலை நேரத்தில் பள்ளிக்கு சென்ற இவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மேகவர்ஷனின் பெற்றோர் மொரப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் 24 மணி நேரத்தில் காணாமல் போன பள்ளி மாணவனை காவல் துறையினர் செல்போன் சிக்னல் மூலம் கண்காணிக்கப்பட்டு பின்பு சேலம் பேருந்து நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அழைத்து வந்தனர்.
இதனை அடுத்து மாணவனை பெற்றோரிடம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். காணாமல் போன பள்ளி மாணவனை துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட காவலர்கள் சரண்ராஜ், சிவலிங்கம் உள்ளிட்ட காவலர் களை பெற்றோர்களும், காவல் துறையினரும் பாராட்டினர்.