உள்ளூர் செய்திகள்

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் பரிசுதொகையை வழங்கப்பட்டது.

போலீஸ்- பொதுமக்கள் நட்புறவு கைப்பந்துபோட்டி

Published On 2022-11-22 08:32 GMT   |   Update On 2022-11-22 08:32 GMT
  • 8 அணிகள் பங்கேற்று விளையாடினர்.
  • திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4 ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர்.

சீர்காழி:

சீர்காழியில் போலிஸ் மற்றும் பொதுமக்கள் நட்புறவு கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது.

சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விளையாட்டுமைதாநத்தில் நடைபெற்ற இப்போட்டிக்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா தலைமைவகித்தார். சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு.லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், விவேகானந்தா கல்விநிறுவனங்களின் தலைவர் கே.வி.இராதாகிருஷ்ணன், செயலர் அனிதாராதாகிருஷ்ணன், பப்ளிக் பள்ளி இயக்குனர் அலெக்சாண்டர், மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியை போலீஸ் சூப்பிரண்டு நிஷா தொடங்கிவைத்தார்.இதில் 8அணிகள் பங்கேற்று விளையாடினர்.மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அணியும், திருவெண்காடு யூத் கிளப் அணியும் இறுதிபோட்டியில் விளையாடினர்.இதில் 25க்கு23,25க்கு 18 என்ற நேர் செட் கணக்கில் திருவெண்காடு அணி வெற்றி பெற்று முதல்பரிசு ரூ.4ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். காவல்துறை அணி இரண்டாம் பரிசாக ரூ.3ஆயிரம் மற்றும் கேடயத்தை வென்றனர். வெற்றிபெற்ற அணிக்கு போலீஸ் சூப்பிரண்டு நிஷா கோப்பையை வழங்கினார்.

Tags:    

Similar News