உள்ளூர் செய்திகள்

திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இணையதளம் மூலம் மாணவிகள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை பார்வையிட்ட காட்சி. தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் துள்ளிகுதித்த மாணவிகள். 

பிளஸ்-1 தேர்வு : திருப்பூர் மாவட்டத்தில் 92.17 சதவீதம் பேர் தேர்ச்சி

Published On 2022-06-27 10:53 GMT   |   Update On 2022-06-27 10:53 GMT
  • 11-ம்வகுப்பு தேர்வில் இந்த ஆண்டு (2022) 11-இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
  • பொதுத்தேர்வுகளில் திருப்பூர் மாவட்டம் பின்தங்கி உள்ளதற்கான காரணங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருப்பூர் :

தமிழகம் முழுவதும் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில், 217 பள்ளிகளை சேர்ந்த 26 ஆயிரத்து 152 பேர் தேர்வெழுதினர். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வினீத், முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி ஆகியோர் இன்று காலை 10 மணிக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டனர்.

இதில் 24,103 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 92.17. இதன் மூலம் மாவட்டத்தில் 11-வது இடத்தை பெற்றுள்ளது. கடந்த 2018,2019ம் ஆண்டுகளில் 11-ம்வகுப்பு தேர்வில் திருப்பூர் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்தது. 2020ம் ஆண்டு 5-ம் இடத்தை பெற்றது. இந்த ஆண்டு (2022) 11-இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது திருப்பூர் மாவட்ட கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் 10,12-ம்வகுப்பு முடிவுகள் வெளியாகின. முந்தைய ஆண்டு10-ம் வகுப்பு தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்றிருந்த திருப்பூர் கல்வி மாவட்டம், 29 இடங்கள் பின்தங்கி 30-வது இடத்துக்கு சென்றது. பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்றிருந்த திருப்பூர் கல்வி மாவட்டம் 6 இடங்கள் பின்தங்கி 7-வது இடம் பிடித்தது. அரசு பொதுத்தேர்வுகளில் திருப்பூர் மாவட்டம் பின்தங்கி உள்ளதற்கான காரணங்கள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News