உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நெகிழி இல்லா தருமபுரி விழிப்புணர்வு தொடர் ஓட்டம்

Published On 2023-03-28 10:23 GMT   |   Update On 2023-03-28 10:23 GMT
  • நெகிழி இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
  • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு தொடர் ஓட்டம் நடைபெற்றது.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொது மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதில் நெகிழி இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு தொடர் ஓட்டம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தினை மாவட்ட கலெக்டர் சாந்தி கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த தொடர் ஓட்டம் செந்தில் நகர், இலக்கியம்பட்டி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, நெசவாளர் காலனி வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவு பெற்றது. இந்த ஓட்டத்தில் கலந்து கொண்டு முதல் இடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக நெகிழி இல்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் மீண்டும் மஞ்சப்பைத் திட்டத்தில் தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை மற்றும் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இந்த விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News