உள்ளூர் செய்திகள்

ஒரு லட்சம் மரக்கன்று நடுவதற்கு திட்டமிட்டுள்ள யு.கே.ஜி மாணவருக்கு ஊக்கம் அளித்த தனியார் மெடிக்கல் அகாடமி

Published On 2022-11-11 17:59 IST   |   Update On 2022-11-11 17:59:00 IST
  • யு.கே.ஜி மாணவன் துரைபாண்டியன் சுமார் 21 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார்.
  • அந்த மாணவனுக்கு நிகழ்ச்சியில் பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

மாமல்லபுரம்:

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிங்ஸ் இண்டர்நேஷ்னல் மெடிக்கல் அகாடமி சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது. கிங்ஸ் அகாடமி மற்றும் ட்ரான்ஸ் வோல்டு கல்வி நிறுவன செயலாளர் ஜெசிந்தா டேவிட் கே. பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி. பார்த்திபன், மல்லை. சத்தியா, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

யு.கே.ஜி பயின்றுவரும் துரைபாண்டியன் என்ற பள்ளி மானவன் சிறு வயதிலிருந்து, இதுநாள்வரை சுமார் 21 ஆயிரம் ஆடுதொடா, லவங்கதுளசி, சிரியனங்கை, பெரியனங்கை, நித்தியகல்யாணி, எலும்புஒட்டி, பேய்விரட்டி, வல்லாரை, கருந்துளசி, வெள்ளைதுளசி, சங்குபூ, இன்சுலின், ஆகிய அரியவகை செடி மற்றும் மரக்கன்றுகளை நட்டு சாதனை படைத்துள்ளார். மேலும் வரும் காலங்களில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடவும் திட்டமிட்டுள்ளார். அந்த மாணவனுக்கு இந்நிகழ்ச்சியில் பாராட்டுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயக்குனர் இந்திரா கே பிள்ளை. தலைமை ஆட்சி/நிருவாக அலுவலர் காட்வின் கே பிள்ளை மற்றும் தலைவர் டேவிட் கே பிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News