உள்ளூர் செய்திகள்

பன்றிகள் பிடிக்கும் பணி.

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பன்றிகள் பிடிக்கப்பட்டது

Published On 2022-06-23 10:01 GMT   |   Update On 2022-06-23 10:01 GMT
  • பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்தன 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் வலை வைத்து உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.
  • பன்றி வளர்ப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் வரவேற்றுள்ளனர்.

சீர்காழி:

சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளான ஈசானியத் தெரு, நங்கநலத் தெரு, கீழ தென்பாதி ஊழியக்காரன் தோப்பு, பனங்காட்டு தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகள் சுற்றி திரிந்தன.

இதனை பிடித்து அப்புறப் படுத்த வேண்டும் என பொதுமக்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், சீர்காழி நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரனிடம் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் உத்தரவின்படி பன்றிகள் பிடிக்க ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீர்காழி போலீசார் உதவியுடன், தூய்மை பணியாளர்கள் ஒத்துழைப்புடன் எம்.எஸ்.கே. நகர், இரணியன் நகர், ஊழியக்காரன் தோப்பு, கிருஷ்ணமூர்த்தி நகர், கற்பக நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதல் கட்டமாக 50 -க்கும் மேற்பட்ட பன்றிகள் வலை வைத்து உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

பன்றி வளர்ப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் வரவேற்றுள்ளனர். அப்போது நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபாலன், நகராட்சி மேலாளர் காதர்தான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் செல்லதுரை, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜகணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News