உள்ளூர் செய்திகள்
டி.சி.ஆர்.மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் தின விழா
- மருத்துவமனை சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பிசியோதெரபிஸ்ட் தினம் கொண்டாடப்பட்டது.
- மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சவுந்தர ராஜ் கேக் வெட்டி இனிப்பு களை வழங்கினார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் சென்னை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள டி.சி.ஆர். மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை சார்பில் ஆசிரியர் தின விழா மற்றும் பிசியோதெரபிஸ்ட் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டி.சி.ஆர்.மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் சவுந்தர ராஜ் தலைமை தாங்கி கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் டி.சி.ஆர். நர்சிங் கல்லூரி முதல்வர் சுமதி, டாக்டர் கள் உதயசந்திரிகா, காமிலா, சையத், முதன்மை அலுவலர் அனிதா, நிர்வாக அலுவலர் சவீர் பாஷா, மேற்பார்வை யாளர் கிருஷ்ணன் மற்றும் மருத்துவ மனை ஊழி யர்கள், நர்சிங் கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர்.