உள்ளூர் செய்திகள்

பெரம்பலூருக்கு 2 தங்கபதக்கம்

Published On 2023-10-29 06:57 GMT   |   Update On 2023-10-29 06:57 GMT
மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் பெரம்பலூருக்கு 2 தங்கபதக்கம்

பெரம்பலூர், 

65-வது குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் மாநில அளவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெறுகிறது. இதில் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் குடியரசு தின விழா போட்டிகளில் முதல் 2 இடங்களை வென்ற மாணவ, மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.

இந்த போட்டிகளில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி. எஸ்.சாத்விகா, 14 வயதிற்குட்பட்ட 600 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கம் பதக்கம் பெற்றுள்ளார்.

அதே போல் பெரம்பலூர் தந்தை ஹென்ஸ் ரோவர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சஜீவா, 14 வயதுக்குட்பட்ட 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். 2 பேரும் தங்க பதக்கம் பெற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்

Tags:    

Similar News