உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளியில் உலக கைகழுவும் தினம் நிகழ்ச்சி

Published On 2022-09-22 14:55 IST   |   Update On 2022-09-22 14:55:00 IST
  • தனியார் பள்ளியில் உலக கைகழுவும் தினம் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது
  • காய்ச்சல் விழுப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது

பெரம்பலூர்

அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வரிசைப்பட்டி கிராமத்தில் உள்ள வரதவிகாஸ் பப்ளிக் பள்ளியில் செயல்படும் செஞ்சிலுவை சங்கம் சார்பில் உலக கை கழுவும் தினம் மற்றும் இன்புளுயன்ஸா காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்சியினை பள்ளியின் தாளாளர் ராஜா ஏற்பாடு செய்திருந்தார். பள்ளி முதல்வர் அருள்பிரபாகர் தலைமைதாங்கினார். மண்டலஅலுவலர் ஆனந்தகுமார் வரவேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மேலமாத்தூர் அரசு மருத்துவர் ரமேஷ் மற்றும் கொளக்காநத்தம் அரசு சிறார் மருத்துவர் மணிகண்டன், சுகாதாரஆய்வாளர் முருகேன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களிடம் இ்ன்புளுயன்ஸா நோய் வராமல் எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்ள செய்ய வேண்டும். நோய்வராமல் காப்பதற்கு நாம் கையை எவ்வாறு கழுவவேண்டும். கை கழுவாமல் சாப்பிட்டால் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றியும், செயல்முறையுடன் விளக்கி கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News