உள்ளூர் செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த திருடனை வளைத்து பிடித்த பொதுமக்கள்

Published On 2022-06-06 15:31 IST   |   Update On 2022-06-06 15:31:00 IST
  • வீட்டிற்குள் புகுந்த திருடனை ெபாதுமக்கள் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
  • திருடப்பட்ட நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப் பள்ளி செல்லும் சாலையில் வசித்து வருபவர் குமார் (வயது 40) எலக்ட்ரீசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். இவர் இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு வேப்பந்தட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாவிற்கு

சென்று சாமி கும்பிட்டனர். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்றபோது வீட்டிற்குள் திருடன் ஒருவன் இருப்பதும் அவன் மாடிப்படி வழியாக தப்பித்து செல்ல முயன்றதும் தெரியவந்தது.

உடனடியாக திருடன் திருடன் என குமார் கூச்சலிட்டு உள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சுற்றிவளைத்தனர். அப்போது மாடியில் இருந்த திருடன் கீழே குதித்து தப்பிக்க முயன்றுள்ளான். மாடியில் இருந்து குதித்ததால் திருடனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

பின்னர் அவனை பொதுமக்கள் பிடித்து அரும்பாவூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் திருட வந்தவன் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது23) என்பது தெரியவந்தது.

மேலும் அவனிடம் இருந்து குமார் வீட்டில் திருடப்பட்ட நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் வெங்கடேசை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவனுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News