உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெரம்பலூர் மாணவர்கள் சாதனை-கலெக்டர் பாராட்டு

Published On 2022-06-20 10:01 GMT   |   Update On 2022-06-20 10:01 GMT
  • பிளஸ்-2 பொதுத்தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்தமைக்காக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களை கலெக்டர் பாராட்டியுள்ளார்
  • ஆசிரியர்களின் கடின முயற்சி மற்றும் மாணவர்களின் முழு கவன படிப்பினால் இந்த சாதனையை பெரம்பலூர் பெற்றுள்ளது


பெரம்பலூர்:

அரசு பொதுத்தேர்வில் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி விகிதத்தில் 97.95 சதவீதம் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், 10-ம் வகுப்பு தேர்வில் 97.15 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து பெரம்பலூர் மாவட்டம் சாதனை படைத்துள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 3 ஆயிரத்து 933 மாணவர்களும், 3ஆயிரத்து 734 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 667 பேர் தேர்வெழுதினர். இதில் 3 ஆயிரத்து 836 மாணவர்களும், 3 ஆயிரத்து 674 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 510 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 97.95 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 4 ஆயிரத்து 186 மாணவர்களும், 3 ஆயிரத்து 704 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 890 பேர் தேர்வெழுதினர். இதில் 4 ஆயிரத்து 18 மாணவர்களும், 3 ஆயிரத்து 647 மாணவிகளும் என மொத்தம் 7 ஆயிரத்து 665 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 97.15 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு ஆசிரியர்களின் கடின முயற்சி மற்றும் மாணவர்களின் முழு கவன படிப்பினால் இந்த சாதனையை பெரம்பலூர் பெற்றுள்ளது என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.


Tags:    

Similar News