உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் தடயவியல், சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்

Published On 2023-08-02 13:42 IST   |   Update On 2023-08-02 13:42:00 IST
  • பெரம்பலூரில் டிஜிட்டல் தடயவியல், சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது
  • பெரம்பலூர் தனலட்சுமி மகளிர் கல்லூரியில், வேந்தர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது

பெரம்பலூர், 

தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரம்பலூர் தடய அறிவியல் துறையின் சார்பாக "டிஜிட்டல் தடயவியல் மற்றும் சைபர் பாதுகாப்பில் எதிர்காலம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார். தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரியின் முதல்வர்உமாதேவி பொங்கியா முன்னிலை வகித்தார். தடய அறிவியல் துறை தலைவர் எஸ்.ராணி சந்திரா வரவேற்புரை ஆற்றினார். பெங்களூருவில் உள்ள ஜீரோபாக்ஸ் இன் டேட்டா பிளாட்ஃபார்ம் நிபுணர் தணிகைவேல் பேசும்போது, சைபர் கிரைம் என்பது உலகளாவிய பிரச்சினை. எதிர்கால டிஜிட்டல் தடயவியல்துறைக்கு வலுவான சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும். இணைய அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கு, சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்துவதும், எல்லைகளை தாண்டி உளவுத்துறையைப் பகிர்வதும் இன்றியமையாததாக இருக்கும் என்று அவர் பேசினார். இந்நிகழ்வில் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News